×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் மகத் வீட்டில் முக்கியமான விசேஷம்! செம்ம கொண்டாட்டத்தில் காதல் ஜோடி! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசி

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

 அதனைத் தொடர்ந்து அவர் காளை, மங்காத்தா மற்றும் விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படங்கள் அவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது. அதனைத் தொடர்ந்தே மகத் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மகத், பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மகத்தின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நடிகர் மகத்தின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இத்தகைய புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த  நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mahat #cinema
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story