சூர்யாவின் சூரரை போற்று படம் எப்படியிருக்கு தெரியுமா? பிரபல நடிகரின் ஒத்த பதிலால் செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தைப் பார்த்த மாதவன் அது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய மாதவனிடம் சூர்யா ரசிகர் ஒருவர், சூரரைப்போற்று படம் பார்த்து விட்டீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் பார்த்துவிட்டேன் Mind Blowing என ஒத்த வார்த்தையில் பதிலளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.