சில ஆண்டுகளுக்கு முன்பு.. மாதம்பட்டி ரங்கராஜுடன் இரண்டாவது திருமணம்.! விளக்கமளித்து ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவு!!
மாதம்பட்டி ரங்கராஜுடன் தனது இரண்டாவது திருமணம் நடைபெற்றது குறித்தும், தாங்கள் குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பது குறித்தும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
தனது சமையல் திறமையால் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.
ஆடை வடிவமைப்பாளருடன் இரண்டாவது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்மையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் விவாகரத்து பெறாமலே இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? என பல சர்ச்சைகள் கிளம்பியது.
இதையும் படிங்க: அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!
ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவு
இதற்கிடையில் விளக்கமளித்து ஜாய் கிரிஸில்டா பகிர்ந்துள்ள பதிவில், “இதனை விளக்கம் கொடுப்பதற்காக பதிவிடுகிறேன். ஒரு சில உறவுகள் அமைதியான முறையில் ஆரம்பமாகும். பின் நம்பிக்கையின் அடிப்படையில் வளரும். நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல், கண்ணியம் முழுமனதுடன் மதிப்புமிக்க கணவன் மனைவியாக எங்களது உறவை தொடங்கினோம். மேலும் இந்த ஆண்டு நாங்கள் எங்களது குழந்தையை ஆழ்ந்த நன்றியுணர்வு, அமைதி மற்றும் அன்புடன் வரவேற்க தயராகிவிட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ரசிகர்களின் பேவரைட் குக் வித் கோமாளி சீசன் 6.! எப்போ தெரியுமா??