×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியான புகைப்படத்தை கண்டு கொந்தளித்துப்போன தளபதி ரசிகர்.! அட்டகாசமான பதிலால் அசத்திய பிகில் பிரபலம்!!

lyrist vivek answered to vijay fan

Advertisement

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

அதனை தொடர்ந்து பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று பிகில் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை தளபதி விஜய் பாடவிருப்பதாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார். மேலும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் விஜய் கைகட்டி நிற்க பாடலாசிரியர் விவேக் அருகே அமர்ந்துள்ளார்  இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்ன அண்ணனே நின்றிருக்கிறார் நீங்க உட்கார்ந்து இருக்கீங்க என்று பாடலாசிரியர் விவேக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



அதற்கு பாடலாசிரியர் விவேக், நான் விஜய் சாரை உட்கார சொன்னேன். ஆனால் அவர் தனது எளிமையால் அதை மறுத்துவிட்டார். நான் உயரம் அதிகம்; கேமிரா கோணங்கள் மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் நான் அமர்ந்துவிட்டேன்  ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இருக்கையில் அமர்ந்திருக்க, விஜய் அவரது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது என்னுடைய கனவுநாள் என்று பதிலளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thalapathi #Bigil #lyrist vivek
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story