×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுக்கடுக்காக இவ்வளவு கஷ்டங்களா! வேதனையுடன் பகிர்ந்த லாஸ்லியா! கண்கலங்கும் ரசிகர்கள்!!

அடுக்கடுக்காக இவ்வளவு கஷ்டங்களா! வேதனையுடன் பகிர்ந்த லாஸ்லியா! கண்கலங்கும் ரசிகர்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்ஸியா. அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் களமிறங்கி பிரெண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே லாஸ்லியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், அது குறித்து மிகவும் வருத்தத்துடன் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இலங்கையர்களாகிய நாங்கள் மிகவும் மோசமான போரை எதிர்கொண்டுள்ளோம். அதில் எங்களது குடும்பங்கள் உள்பட அனைத்தையும் இழந்தோம். அதனைத் தொடர்ந்து சுனாமியை எதிர்கொண்டோம். 2019ல் தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம்.

அதன்பிறகு கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டோம். தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம். இவை எங்களது தவறல்ல. ஆனாலும் இவை அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் இலங்கையர்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும்  அனைத்தையும் எதிர்கொள்ளுமளவிற்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போதும் இந்த பரிதாபமான நிலையைசமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம் என தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #srilanka
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story