×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் வீடா இது.! லாஸ்லியா மற்றும் சாக்ஷி என்ன பேச்சு பேசுறாங்க.! வைரலாகும் ஷாக் வீடியோ.!!

losliya sakshi fight video viral

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 70 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 3  தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்சன் , வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யார் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிற்குள் வந்ததுமே பல கலவரங்கள் வெடிக்க துவங்கியது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் விருது அளிக்கும் டாஸ்க் நடைபெற்றது. அப்பொழுது லாஸ்லியாவிற்கு பச்சோந்தி விருது அளிக்கப்பட்டது.அதனை ஏற்க மறுத்த லாஸ்லியா அதனை கீழே தூக்கிப்போட்டு சென்றார். இதனால் சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா இருவரும் கோபம் அடைந்து லாஸ்லியாவுடன் வாக்குவாதம் செய்கின்றனர்.அப்பொழுது லாஸ்லியா மற்றும் சாக்க்ஷிக்கு பெரும் சண்டையும் வெடிக்கிறது. இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாக்‌ஷிக்கும், லொஸ்லியாவுக்கும் கடும் சண்டை வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அமைதி காத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #Sakshi #bigboss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story