கொரோனா வைரஸ் பீதி! பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!
Losliya post photo with mask

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா கொரோனா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.