தந்தை மரணம்: லாஷ்லியாவின் தற்போதைய நிலை என்ன? லாஸ்லியாவிடம் பேசினேன் – வனிதா பதிவிட்ட உருக்கமான பதிவு
லாஷ்லியாவின் தந்தை மரணமடைந்த நிலையில் லாஷ்லியாவிடம் பேசியதாக வனிதா தெரிவித்துள்ளார்.

லாஷ்லியாவின் தந்தை மரணமடைந்த நிலையில் லாஷ்லியாவிடம் பேசியதாக வனிதா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஷ்லியா. தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இந்நிலையில் லாஷ்லியாவின் தந்தை கனடாவில் இருந்தநிலையில் நேற்று இரவு அவர் திடீரென காலமானார்.
லாஷ்லியா தந்தையின் மரண செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியானதில் இருந்து லாஷ்லியாவின் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் லாஷ்லியாவின் தந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்ட பிறகு தான் லாஷ்லியாவிடம் பேசியதாக அவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "நான் லாஷ்லியாவிடம் பேசினேன்.. அவர் மிகவும் அழுகிறார்.. ஆனாலும் லாஷ்லியா மிகவும் தைரியமாக இருப்பதாகவும், அவர் ஸ்ரீலங்காவுக்கு செல்ல தூதரகத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்துவருவதாகவும், விஜய் தொலைக்காட்சி அணி அவருடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணமாக உடல் உடனடியாக ஸ்ரீலங்காவை அடைய முடியாது." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.