×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன்முதலாக மன்னிப்பு கேட்டுள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா! அவரது பதிவால் கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!

losliya ask sorry

Advertisement


பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று விறுவிறுப்பாக முடிந்தது. 

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் பாடகர் முகின் ராவ் வெற்றியாளர் என அறிவிக்கப்பெற்றார். பிக்பாஸ்மூன்றாவது கலந்து கொண்ட 15 பிரபலங்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர் ஆவார். இவர் நிகழ்ச்சியினுள் வந்த முதல் நாளில் இருந்து அவர் வெளியேறிய வரை அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

நிகழ்ச்சியின்போது லாஸ்லியா கவீனுடன் பழகிய விதம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, அவருடைய அப்பாவிற்கும் அதிக கோபத்தை ஏற்படுத்தியது. லாஸ்லியாவின் அப்பவே நிகழ்ச்சிக்கு வந்து அவரை திட்டினார். இதனையடுத்து பிக்பாஸ் போட்டியில் 3-வது ரன்னராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸில் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த அவர் இதுவரை எந்த ஒரு பேட்டியோ, சமூகவலைத்தளங்களில் இதைப் பற்றி பதிவோ எதுவும் போடாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தைதான். அது அனைவருக்கும் போதுமானதாக இருக்காது.

நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த ஆதரவு ஆச்சர்யமாக உள்ளது. நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாததற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கும் மன்னிக்கவும். சத்தியமாக நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். பெருமைப்படுத்துவேன். ஐ லவ் யூ சோ மச்" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #losliya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story