×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோ படத்திக்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

லியோ படத்திக்காக லோகேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?!

Advertisement

"மாநகரம்" படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி, தற்போது தமிழின் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து லோகேஷ் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இதில் விக்ரம் திரைப்படம் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இவர் இயக்கிய நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்து ரசிகர்களிடையே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. விக்ரம்  படத்தில் கமலை வைத்து இயக்கிய லோகேஷ், அடுத்து ரஜினியை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், தற்போது விஜயுடன் மீண்டும் இணைந்து "லியோ" திரைப்படத்தை இயக்கியுள்ளார். லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஒரு வருடமாக லோகேஷ் மிகவும் கடினமான உழைப்பை இப்படத்திற்காக கொடுத்துள்ளார்.

மேலும் இவர் இயக்கிய நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததால், லோகேஷ் கனகராஜின் சம்பளமும் நாளுக்கு நாள் உயர்கிறது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது இவர் லியோ படத்திற்காக 30 - 35 கோடி சம்பளம் வாங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #vijay #Lokesh #Viral #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story