×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இது கைதி-2வில் தெரியவரும்.! ரசிகர்களின் அந்த கேள்விக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய பதில்!!

இந்த விஷயம் கைதி- 2வில் விளக்கபடும்! ரசிகர்களின் குழப்பத்திற்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்!!

Advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் விக்ரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இதற்கு முன் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

மேலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் மாஸ் காட்டியுள்ளனர். இந்த படத்தை ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர்.மேலும் படத்தின் சில காட்சிகள் கைதி படத்துடன் தொடர்புடைய காட்சிகளாக இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர், கைதி படத்தில் உயிரிழந்த அர்ஜுன் தாஸ் கேரக்டர் எப்படி மீண்டும் விக்ரம் படத்தில் உயிருடன் வந்தார் என கேள்வியெழுப்பி இருந்தார்.

அதற்கு லோகேஷ், கைதி படத்தில் நெப்போலியனால், அன்பு என்ற அர்ஜுன் தாஸ் கேரக்டரிடன் தாடைதான் உடைக்கப்பட்டது. அதனால்தான் விக்ரம் படத்தில் அவருக்கு தாடையில் தையல் இருக்கும்படியாக காட்டப்பட்டது. மேலும் இதுகுறித்து கைதி 2 படத்தில் விரிவாக விவரிக்கப்படும் என பதிலளித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kaithi #Arjundass #Logesh kanagaraj
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story