×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியாகிறது வைபவ், வாணிபோஜனின் லாக்கப்! அதுவும் எப்பொழுது தெரியுமா? செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Lockup movie released in zee 5 tomorrow

Advertisement

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் சில ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. மேலும் லாக்கப் திரைப்படமும் நாளை இணையதளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் S.G.சார்லஸ் இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் லாக்கப். இந்த படத்தில் நடிகர் வைபவ் மற்றும்  வெங்கட் பிரபு இருவரும் போலீசாக நடித்துள்ளனர். மேலும் கதநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன்  பூர்ணா, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர்  கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அரோல் கொரோலி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் 14 நாளை ZEE5 ஓடிடி இணைய தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வீட்டில் குடும்பத்தோடு அனைவரும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என நடிகர் வைபவ் கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளிவந்துள்ளன. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lockup #Vaipav #vani bhojan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story