×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெய் பீம் படத்தில் நடித்த செங்கேணியா இது... லிஜிமோல் ஜோஸின் திருமண புகைப்படம் வைரல் .!?

ஜெய் பீம் படத்தில் நடித்த செங்கேணியா இது... லிஜிமோல் ஜோஸின் திருமண புகைப்படம் வைரல் .!?

Advertisement

மாலிவுட் திரையுலகில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற நடிகை லிஜிமோல் ஜோஸ். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமானார். மேலும், ஹனி பீ 2.5, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், ஆகிய திரைபடங்களிலும் நடித்துள்ளார்.


அதன் பின், லிஜிமோல் ஜோஸ், கோலிவுட்டில் 2019 ஆம் வருடம் சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷுடன் இணைந்து நடித்து ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். மேலும் இவர் தீதும் நன்றும் மற்றும் ஜெய் பீம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தில் இவர் நடித்த செங்கேணி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. படத்தின் மூலம் சிறந்த நடிகையாக, பிலிம்பேர் விருது லிஜிமோல் ஜோஸ்க்கு வழங்கப்பட்டது.


அத்தகைய நிலையில், லிஜிமோல் ஜோஸ் தனது நண்பர் அருண் என்பவரை காதலித்து, 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்தது. அந்த காலக்கட்டத்தில், இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது. திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jei bheem #Senkeni #awards #marriage #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story