×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோ படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்.. உண்மையை உடைத்த பிரபலம்.?

லியோ படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்.. உண்மையை உடைத்த பிரபலம்.?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது வரை முன்னணி நடிகராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் தன் தந்தையின் மூலமாக நடிக்க ஆரம்பித்து இருந்தாலும், தனது விடாமுயற்சி, திறமையின் மூலம் இன்று வரை நிலைத்து நிற்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் வெற்றி பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை குவித்தது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.


இதுபோன்ற நிலையில், விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற மிகப் பெரும் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்த லோகேஷ் கனகராஜ் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் லியோ படத்தின் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ரசிகர்கள் 'லியோ' படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு தயாரிப்பாளர் "இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லாமல் வேற ஏதாவது ஊரில் நடத்துவதற்கு பிளான் செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஊரில் என்று விரைவில் தகவல் வெளிவரும் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளித்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #vijay #movie #Update #News
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story