×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பரான விருந்து.! படக்குழு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!!

இன்று மாலை தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பரான விருந்து.! வெளியிட்ட அசத்தல் அப்டேட்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதனைத் தொடர்ந்து தளபதி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் லியோ படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளாராம். இதனை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #vijay #First song
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story