×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ள விஜயின் லியோ!" வெளியானது அதிகார்வப்பூர்வத் தகவல்!

உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ள விஜயின் லியோ! வெளியானது அதிகார்வப்பூர்வத் தகவல்!

Advertisement

கடந்த அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் "லியோ". லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் முறையில் எடுக்கப்பட்ட படம் இது.

செவென் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜயுடன், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், முதல் நாளே 148.5கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது.

தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 540கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பிறகு வசூல் வேகம் குறைந்த நிலையில், தற்போது வேறு பெரிய படங்கள் வெளியாகாததால், மீண்டும் லியோவின் வசூல் எகிறியுள்ளது.

தற்போது படம் வெளியாகி 21 நாட்களில் உலக அளவில் 600 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து விஜயின் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த முதல் படமாகவும், தமிழ் சினிமாவில் 3வது படமாவாகவும் லியோ பெயர் பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leo #Collection #Viral #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story