×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

Legend Saravanan Leader: 'ரத்தக்கறை படிந்த கத்தி.. டென்ஷனில் நாயகன்'.. லெஜண்ட் சரவணனின் அடுத்த படம்.. திரில் அப்டேட்.!

Legend Saravanan New Movie: சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனின் புதிய படத்துக்கு லீடர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் First Look வெளியாகியுள்ளது.

Advertisement

லெஜண்ட் சரவணனின் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தமிழ் திரையுலகம் சுதந்திரத்துக்கு பின் பல கதாநாயகர்களை கண்டிருந்தாலும், ஒவ்வொருவரும் அந்தந்த காலத்தில் பிரபலமான நபர்களாக இருந்திருப்பார்கள். தொழில்நுட்பம் நிறைந்த இந்த காலத்தில், சோசியல் மீடியா பல நடிப்பு அரக்கர்களை அடையாளம் காண்பித்து இருக்கிறது. இயக்குனர்களும் படத்தின் இயக்கத்தில் முடங்கி கிடைக்காமல், தங்களின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

விளம்பர நடிப்பு டூ திரைப்பட அறிமுகம்:

இதனிடையே, தமிழகத்தின் ஜவுளி அடையாளங்களில் ஒன்றாக கவனிக்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், திரைப்படங்கள் வாயிலாகவும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தி தொடங்கினார். தனது கடையின் விளம்பரத்தில் தோன்றியவர், பின் தி லெஜண்ட் சரவணன் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

இதையும் படிங்க: சொந்த ஊரில் சொந்தம் பந்தத்துடன் ஜோராக தீபாவளி கொண்டாடிய நடிகர் சூரி! தீபாவளி கொண்டாட்ட வீடியோ....

லெஜண்ட் சரவணன் புதிய படம் (Legend Saravanan Leader Movie Update):

இந்நிலையில், அவரது புதிய படம் தொடர்பான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. கையில் கத்தியுடன் சரவணன் மாறுபட்ட தோற்றத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பாக லீடர் என்பது வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ், கருடன் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வழங்குகிறார். நடிகர்கள் விடிவி கணேஷ், ஆண்ட்ரியா, பாயல் உட்பட பலரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். 

இதையும் படிங்க: Demonte Colony 3: திகில் பயணத்துக்கு ரெடியா? டிமான்டி படத்தின் 3ம் பாகம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Legend saravanan #Leader #லெஜண்ட் சரவணன் #சரவணா ஸ்டோர்ஸ் #லீடர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story