அரிய புகைப்படத்தை வெளியிட்டு தனது விருப்பத்தை அண்ணாத்த ரஜினிக்கு தெரிவித்த லாரன்ஸ்!
Lawrence wish to act with rajini

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் பெயர் 'அண்ணாத்த' என இன்று அறிவிக்கப்பட்டது. அதுமுதல் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த உற்சாகம் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸையும் விட்டுவைக்கவில்லை. 'அண்ணாத்த' என்ற பெயரையும் கேட்டதும் ரஜினியுடன் ஒரு சிறிய காட்சியில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ஒரு குரூப் டான்ஸராக தனது திரைப் பயணத்தை துவஙகியவர் தான் லாரன்ஸ். பின்னர் படிப்படியாக டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் என பல துறைகளில் லாரன்ஸ் கலக்கி வருகிறார்.
அவருடைய வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்தாலும் லாரன்ஸ் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் என்று கூறிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடையக்கூடியவர். இந்நிலையில் குரூப் டான்ஸராக இருக்கும் போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள லாரன்ஸ், "அண்ணாத்தயுடன் ஒரு சிறிய காட்சியில் நடிக்க ஆசையாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.