தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓட்டல்களில் இதை செய்ய நான் ஒன்றும் முட்டாள் இல்லை.. ஸ்ரீ ரெட்டி கூறிய புகார் பற்றி ராகவா லாரன்ஸ் விளக்கம்.

ஓட்டல்களில் இதை செய்ய நான் ஒன்றும் முட்டாள் இல்லை.. ஸ்ரீ ரெட்டி கூறிய புகார் பற்றி ராகவா லாரன்ஸ் விளக்கம்.

lawrence replies about srireddy Advertisement

தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றன.

Sri reddy

ராகவா லாரன்ஸ் தன்னை ஹைதராபாத்தில் சந்தித்தப்போது படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்தார். இதற்கு வெகு நாட்களாகப் பதில் அளிக்காத ராகவா லாரன்ஸ் தற்போது ஃபேஸ்புக் மூலம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

https://www.facebook.com/offllawrence/posts/1604806116298417

அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஸ்ரீ ரெட்டி விவகாரம் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க நினைக்கிறேன். இது ஒன்றும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை. இதை பற்றி நான் கவலைப்படவும் இல்லை. ஆனால் மீடியா நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு இது பற்றி விளக்கம் கேட்ட வண்ணம் இருப்பதால் தான் தற்போது விளக்கம் அளிக்க நினைக்கிறேன்.

தெலுங்கு ரெபல் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் என்னை சந்தித்ததாக ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். அது நடந்தது எழு வருடங்களுக்கு முன்பு. அப்போதே இது பற்றி பேசாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் அவர் இதை சொல்கிறார். சரி அதையும் விட்டுவிடலாம்.

எனது ஓட்டல் அறைக்கு வந்ததாகவும், அவரை நான் தவறாக பயன்படுத்திக்கொண்டேன் என்றும் ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். மேலும் எனது ஓட்டல் அறையில், சாமி படங்களும், ருத்ராக்ஷ மாலையும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலையை வைத்து பூஜை செய்யும் அளவுக்கு நான் என்ன முட்டாளா?

நான் ஸ்ரீ ரெட்டிக்கு நேரடியாகவே சொல்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். கடவுளுக்கு தெரியும். இத்தனைக்கு பிறகும் அவர் மீது எனக்கு கோபம் இல்லை.

ஸ்ரீ ரெட்டியின் பேட்டிகளை நான் பார்த்தேன். அவரை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவருடைய பிரச்சினை தான் என்ன? நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி எல்லோரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தானே.

தான் ஒரு நல்ல நடிகை என ஸ்ரீ ரெட்டி கூறுகிறார். நாம் ஒன்று செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து ஊடகத்தினரை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு சீனும், சில டான்ஸ் ஸ்டெப்புகளும் தருகிறேன். நான் ஆடும் அளவுக்கு கடினமான ஸ்டெப்புகளை தரமாட்டேன். அந்த சீனுக்கு தகுந்த மாதிரி ஸ்ரீ ரெட்டி நடித்தும், ஆடியும் காட்டட்டும். உண்மையிலேயே அது நன்றாக இருந்தால், அந்த இடத்திலேயே வைத்து எனது அடுத்த படத்துக்காக  அவரை ஒப்பந்தம் செய்து முன்பணம் தருகிறேன்.

நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே அவரை சந்திப்பதில் எனக்கு பயமோ, தயக்கமோ இல்லை. எனது படத்தில் நடிப்பதன் மூலம் அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கலாம்.

எல்லோர் முன்பும் நடித்துக்காட்ட தயக்கம் இருந்தால், எனது மேலாளரை தொடர்பு கொண்டு, அவருடையே வழக்கறிஞர் மற்றும் நலம் விரும்பிகள் முன்னிலையில் தனது நடிப்பு திறனை அவர் வெளிப்படுத்தி காட்டட்டும். அதற்கும் நான் தயார் தான். அவருக்கு நான் உதவி செய்கிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri reddy #ragava lawrence
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story