சர்ச்சையை கிளப்பிய லியோ பட காட்சி.. இளைய தளபதி விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.?
சர்ச்சையை கிளப்பிய லியோ பட காட்சி.. இளைய தளபதி விஜயை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் தோல்வியை அடைந்தாலும் விடாமுயற்சியால் தற்போது முன்னணி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இளைய தளபதி விஜயின் நடிப்பு திறமையின் மூலம் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கிறது. படத்தின் பல முக்கிய பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் பாடலில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பதை போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காட்சியை இணையத்தில் பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் விஜய் முன்னதாகவே இனிமேல் புகைப்பிடிப்பது போன்று நடிக்க மாட்டேன் என்று கூறிய செய்தித்தாளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.