Wings loading... ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை லாஸ்லியா! வைரலாகும் வீடியோ...
பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் காணொளி வைரலாகி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் தனக்கென இடம்பிடித்திருக்கும் லாஸ்லியா, தற்போது தனது உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்மில் கடுமையாக உழைத்து வருகிறார். ரசிகர்களுடன் தன்னுடைய ஃபிட்னஸ் பயணத்தை பகிர்ந்து கொள்வது, அவரின் பிரபலத்தையும் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் மூலம் புகழ்
இலங்கை பூர்வீகமான லாஸ்லியா மரியநேசன், அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். பின்னர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றார்.
சினிமா பயணம்
பிக்பாஸ் வெற்றியைத் தொடர்ந்து லாஸ்லியா, ‘ஃபிரண்ட்ஷிப்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman போன்ற படங்களில் நடித்தார். சினிமாவுடன் சேர்த்து, உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகனா! வைரலாகும் வீடியோ...
ஜிம் காணொளி வைரல்
சமீபத்தில் ஜிம்மில் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் காணொளியை, “Wings loading…” என்ற குறிப்புடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி, ஏராளமான லைக்குகளை குவித்துள்ளது.
தனது முயற்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் லாஸ்லியா, எதிர்காலத்தில் மேலும் பல சினிமா வாய்ப்புகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அப்படியே வடிவேலு மாறியே இருக்கே! ரெடின் கிங்ஸ்லி மனைவியின் காமெடி வீடியோ! இணையத்தில் வைராலாகும் காணொளி...