லொஸ்லியாவை பார்த்தாலே பிடிக்கவில்லை, முன்னணி டான்ஸ் மாஸ்டரின் வெளிப்படையான கருத்து!
Lasliya dance master

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3. ஏறக்குறைய 60 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி, அபிராமி என 8 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் வனிதாவின் ரீ என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் இல்லம் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் நகர்கிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கையை சேர்ந்த லாஷ்லியா இளைஞர்களின் மனதை கவர்ந்து கனவு கன்னியாக வலம் வருகிறார். ஆனால் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பேசுகையில் ‘பிக்பாஸ் வீட்டில் வனிதாவை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
அவருக்கு பிறகு எனக்கு பிடிக்காத ஒரு ஆள் என்றால் அது லொஸ்லியா தான்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.