×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே நாளில் இவ்வளவு பேரா? ராகவா லாரன்ஸின் லெட்சுமி பாம் ட்ரைலர் படைத்த பெரும் சாதனை!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகியுள்ள லட்சுமிபாம் பட ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இந்தியில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லட்சுமி பாம். இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற காஞ்சனா திரைப்படத்தில் கதாநாயகியாக ராய் லட்சுமி மற்றும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தனர். மேலும் அவர்களுடன் தேவதர்ஷினி, ஸ்ரீமன்,  கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள லட்சுமி பாம் திரைப்படம்  கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது லட்சுமி பாம் பட ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒரே நாளில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lakshmi bomb #trailer
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story