தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப கேலி செய்தார்கள்! உடல் எடையை குறைத்தது குறித்து வேதனையுடன் பகிர்ந்த குஷ்பு மகள்!!

ரொம்ப கேலி செய்தார்கள்! உடல் எடையை குறைத்தது குறித்து வேதனையுடன் பகிர்ந்த குஷ்பு மகள்!!

kushnu daughter losing weight Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நன்கு உடல் எடை அதிகரித்திருந்த அவரது இளைய மகள் அவந்திகா தற்போது எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தான் எடை அதிகமாக இருந்தபோது பலரும் கேலி கிண்டல் செய்தது குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, நானும் எனது அக்காவும் சினிமாவில் ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம். அம்மா, அப்பா இருவருமே சினிமாவில் வருவதற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளார்கள். ஆனால், அவர்களது  பிரபலத்தை பயன்படுத்தி நாங்கள் எதுவும் செய்ய விரும்பவில்லை.

Kushbhu

உடல் சிறு வயதிலிருந்தே எடை அதிகரித்து இருந்தேன். என் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அதை குறையாக சொன்னதில்லை. எங்கள் குடும்பத்தின் ஜீன் அப்படிதான். ஆனால், ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் நான் நிறைய கேலி, கிண்டல்களை சந்தித்தேன். அதனால் மிகுந்த மன அழுத்ததமடைந்தேன்.

மேலும் அந்த கோபமெல்லாம் எனது அம்மா மேல் திரும்பியது. பின்னர் தனிப்பட்ட முறையில் நான் உடல் எடையை குறைக்க வேண்டுமென  எண்ணி உணவு கட்டுப்பாடு உடற்பயிற்சி மேற்கொண்டேன். தற்போது உடல் எடையை குறைத்துள்ளேன் என கூறியுள்ளார்.   

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kushbhu #avanthika #weight loss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story