பரபரப்பான அரசியல் சூழலில் திடீரென நடிகர் பிரபு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு..! வைரல் புகைப்படங்கள்..
பிரபு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகை குஸ்புவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவ

பிரபு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகை குஸ்புவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நாயகிகளில் ஒருவராக இருந்த குஸ்பு அவர்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் சேர்ந்த அவர், அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் குஸ்பு அவர்கள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிவாஜி அவர்களின் மூத்த மகன் ராம்குமார் கணேசன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு தனது வாழ்த்து தெரிவிக்கவும், அவரது ஆசி பெறவும் சென்றுள்ளார் குஸ்பு.
மேலும் சிவாஜி அவர்களின் வீட்டில் சிவாஜி அவர்களின் மகன் பிரபு, ராம் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.