×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எழில் கொஞ்சும் நடனம்... ரசிகர்களை 90ஸ்க்கே இழுத்துச் சென்ற குஷ்பூ ..... வைரலான வீடியோ !

எழில் கொஞ்சும் நடன அசைவின் மூலம் ரசிகர்களை 90க்கு இழுத்துச் சென்ற குஷ்பூ ..... வைரலான வீடியோ !

Advertisement

80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 90களில் சினிமா ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் குஷ்பூ. வருஷம் 16 மற்றும் சின்னத்தம்பி ஆகிய திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றியால்  ரசிகர்கள் பூஜித்து கொண்டாடக்கூடிய நடிகையாக உயர்ந்தார்.

தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இல்லாமல் குஷ்புவிற்கு கோவில் கட்டினார்கள் என்றால் அவர் மீது ரசிகர்கள் எவ்வளவு பக்தியாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போது சின்னத்திரையிலும்  சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.



தேசியக் கட்சியில் இணைந்து தீவிரமான அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். சமூக ஊடகங்களிலும்  சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் நடனங்களையும் பதிவேற்றி ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு நடன வீடியோ ஒன்று ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கன்னட திரைப்படமான  ரணதீரா  என்ற திரைப்படத்தின் பாடலுக்கு  குஷ்பூ நடனமாடும் வீடியோ தான்  ரசிகர்களிடம் வைரலாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kushboo #ranadheera #90smemories #kollywoodcinema #kannadamovie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story