தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் அனிதா சம்பத்துக்கு குறும்படம்: உண்மையில் சுரேஷ் சக்ரவர்த்தி அப்படி பேசினாரா? வைரலாகும் வீடியோ.

பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்திக்கு இடையேயான பிரச்சனை தற்போது சூடுபிடித்துள்ளது.

Kurumbatam for bigg boss anitha sampath viral video Advertisement

பிக் பாஸ் வீட்டில் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்திக்கு இடையேயான பிரச்சனை தற்போது சூடுபிடித்துள்ளது.

16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர்கள் ரியோ, ஆரி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், அனிதா சம்பத் உட்பட 16 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் போட்டியின் இரண்டாவது நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. செய்தி வாசிப்பாளர்கள் பேசும்போது எச்சில் தெறிக்கும் என சுரேஷ் சக்கரவர்த்தி கூறியதாகவும், அது மிகவும் கீழ்த்தரமான வார்த்தை எனவும் கூறி அவருடன் வாக்குவாதம் செய்தார் அனிதா சம்பத்.

anitha sampath

ஆனால் நான் அப்படிக் கூறவில்லை எனவும் சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் என மட்டுமே தான் கூறியதாகவும் சுரேஷ் சக்கரவர்த்தி கூறியிருந்தார். ஆனால் இல்லை, இல்லை நீங்கள் செய்தி வாசிப்பாளர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் வேண்டுமென்றால் குறும்படம் போட்டுக் காட்டப்படும் எனவும் அனிதா சம்பத் மீண்டும் மீண்டும் வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில் நடிகர் கமல் குறும்படம் போடுவதற்கு முன்பாகவே ரசிகர்கள் அனிதா சம்பத்திற்கு குறும்படம் ஒன்றை போட்டு காண்பித்துள்ளனர். அந்த வீடியோவில் சுரேஷ் சக்கரவர்த்தி அனிதா சம்பத் மற்றும் சில பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கையில், சிலர் வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் என்று மட்டுமே சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

அவர் அந்த இடத்தில் செய்திவாசிப்பாளர் பற்றி எந்த ஒரு வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anitha sampath #Bigg boss kurumbatam #Bigg boss Tamil 4 #Bigg boss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story