×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரியா வரை வரவேற்பு பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் நடனம்.. அசத்தும் கொரியப்பெண்..!

கொரியா வரை வரவேற்பு பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் நடனம்.. அசத்தும் கொரியப்பெண்..!

Advertisement

தெலுங்கு மொழியில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மாடானா, பகத் பாசில் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

5 மொழிகளில் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா வசூலிலும், வரவேற்பு ரீதியிலும் அமோக வெற்றி அடைந்தது. இந்த படத்தின் ஊ சொல்றியா மாமா, ஸ்ரீ வள்ளி மற்றும் என் சாமி ஆகிய பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தது. இப்படத்தின் 2 ஆவது பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் கால்களை சாய்த்து ஆடுவது போன்ற நடனம் பெரிதும் கவரப்பட்ட நிலையில், தற்போது கொரியாவை சேர்ந்த பெண்மணி ஸ்ரீ வள்ளி பாடல் பின்னணியில் ஒலிக்க, தனது கால்களை அல்லு அர்ஜுன் போல அசைத்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Korea #cinema #world #Pushpa #Srivalli Song #dance #Korean Woman
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story