×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொலை... மிரட்டலான லுக்கில் மிரள வைக்கும் விஜய் ஆண்டனி! வெளிவந்த வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

கொலை... மிரட்டலான லுக்கில் மிரள வைக்கும் விஜய் ஆண்டனி! வெளிவந்த வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து பெருமளவில் பிரபலமானார்.  பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்த அவர் வித்தியாசமான கருத்துமிக்க கதைக்களத்துடன் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை'யில் நடித்துள்ளார். இப்படத்தை  இயக்குநர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். கொலை படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார்.

மேலும் அவர்களுடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் ஆண்டனி 
கறுப்பு நிற உடையில் தலையில் தொப்பியுடன் மிரட்டலான லுக்கில் காணப்படுகிறார். மேலும் சிலரது ஓவியங்களையும் கைகளில் வைத்திருந்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kolai #firstlook #Vijay anthony
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story