×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தவறான வீடியோ பரவல்! சைபர் க்ரைமில் புகார் அளித்த ஜெமினி பட நடிகை கிரண் ரத்தோட்!

நடிகை கிரண் ரத்தோட் மீது பரப்பப்படும் ஆபாச வீடியோ தொடர்பாக அவர் விளக்கம் அளித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

Advertisement

விக்ரம் நடித்த ஜெமினி, மற்றும் அஜித் நடித்த திரைப்படங்களில் வில்லனின் காதலியாக நடித்தவர் கிரண் ரத்தோட். ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த கிரணுக்கு, பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனால், கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் அவர் இடம் பெறவில்லை.

இன்ஸ்டாவில் கிரணின் புதிய அவதாரம்

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவர் பகிரும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்துகின்றன. பலரும் கிரணின் புதிய விதமான லுக் களை பாராட்டியுள்ளனர்.

வைரலாகும் ஆபாச வீடியோ குறித்த புகார்

தற்போது, சமூக ஊடகங்களில் சிலர் கிரணின் ஆபாச வீடியோவை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது டிஜிட்டல் மாற்றிய வீடியோ என்றும், தனது தனியுரிமைக்கு மாறானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சைபர் கிரைமில் புகார்

இந்த வீடியோவால் பாதிக்கப்பட்ட கிரண், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும், இது சட்டப்படி குற்றமாகும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அச்சத்தில் மக்கள்! மீண்டும் தலைதூக்கும் கொரோனாவால் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா..? சுகாதாரத்துறை அளித்த விளக்கம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#leaked video issue #cyber crime complaint #கிரண் ரத்தோட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story