×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம லக்குதான்! இயக்குனர் ஷங்கரின் இரு படங்களிலும் ஹீரோயினாகும் பிரபல நடிகை! மாஸ் ஹீரோக்கள் யார் தெரியுமா?

ஏராளமான ஹிட் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் ஷங்கர் கமல் நடிப்பில் இந

Advertisement

ஏராளமான ஹிட் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் ஷங்கர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை உருவாக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட அதன் ஷூட்டிங் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் தில் ராஜு தயாரிப்பில் ராம்சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  அத்துடன் பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து படம் ஒன்றை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இப்படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. அந்நியன் படத்தில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கிறாராம். 

இந்நிலையில் இந்த இரு படங்களிலும் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் கவர்ச்சி நாயகி கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shankar #Kiara adwani #Raamcharan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story