தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல முன்னணி நடிகருடன், எம்.எஸ் தோனி பட நடிகைக்கு திருமணம்.! எப்போ தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!

பிரபல முன்னணி நடிகருடன், எம்.எஸ் தோனி பட நடிகைக்கு திருமணம்.! எப்போ தெரியுமா?? தீயாய் பரவும் தகவல்!!

Kiara advani marriage with siddharth malkothra coming december Advertisement

பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கியாரா அத்வானியும், பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் மல்கோத்ராவிடம்  கியாராவுடன் எப்போது திருமணம் என கேள்வி எழுப்பப்பட்டது.

kiara advani

அதற்கு அவர், நாங்கள் எங்களது எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரம் வரும்போது அதனை பற்றிய தகவலை வெளியிடுவோம் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து கியாரா மற்றும் சித்தார்த் திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் தங்களது திருமணத்தை வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kiara advani #marriage #Siddharth malkothra
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story