×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் கவினை பார்த்து குஷ்பு கூறி ஒற்றை வார்த்தை... அதற்கு கவின் என்ன பதிலளித்துள்ளார் என்று பாருங்கள்.!

நடிகர் கவினை பார்த்து குஷ்பு கூறி ஒற்றை வார்த்தை... அதற்கு கவின் என்ன பதிலளித்துள்ளார் என்று பாருங்கள்.!

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் கவின். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார். பின் சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக மாறினார் கவின்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார். அதுமட்டுமின்றி  வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் அதிக அளவில் வந்தது.கவின் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகர் கவின் தற்போது ஆகாஷ்வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது ஆஹா தமிழ் என்ற ஓடிடி தளத்தில் வெளிவருகிறது.சமீபத்தில் தான் ஆஹா தளத்தின் துவக்க விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகை குஷ்பூ கவின் பற்றி பெருமையாக பேசினார். 

அதில் நடிகர் கவின் மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பூ கூறியதும் கவின் பூரிப்பானார். பின் இந்நிகழ்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார். நன்றி மேடம் நான் இன்னும் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kavin #Khushbu #appreciate
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story