×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கொஞ்சம் தமிழ்ல பேசுங்க மேடம்..." பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் வீடியோ.!

கொஞ்சம் தமிழ்ல பேசுங்க மேடம்... பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் வீடியோ.!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சிவா கார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன இதனைத் தொடர்ந்து விஜய், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த பலம் பெறும் நடிகை சாவித்திரியின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநதியில்  இவர் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது . தற்போது இவரது நடிப்பில் உருவான தசரா என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது . இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பகத் பாஸில் ஆகியோருடன் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.



இந்நிலையில் தனது குடும்பத்தாருடன் திருப்பதி சென்று இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் . அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது  தமிழ்நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தமிழில் பேசுங்கள் என அவரிடம் கூறுகிறார் . அதற்கு சிரித்துக் கொண்டே கீர்த்தி சுரேஷ் நான் இப்போது திருப்பதியில் இருக்கிறேன் என பதில் அளித்திருக்கிறார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthisuresh #Tirupathi #Pressmeet #speakintamil #kollywoodnews
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story