கீர்த்தி சுரேஷை காமெடி நடிகர்களுடன் வச்சு செஞ்சுட்டானுங்க! வைரலாகும் வீடியோ!
Keerthy suresh memes video goes viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். திரையுலகிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மூலம் பிரபலமான இவர் தற்போது தளபதி நடித்த சர்க்கார் வரை வளர்ந்துநிற்கிறார்.
விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தனி ஒரு நடிகையாக இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
கீர்த்தி சுரேஷ் என்னதான் பிரமாதமாக நடித்தாலும், நடனம் ஆடினாலும் நெட்டிசன்கள் ஒருபக்கம் அவரை கலாய்த்துதான் வருகின்றனர். அதிலும் தற்போது வெளியான சர்க்கார் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படாதது ரசிகர்கள் மேலும் கிண்டல் செய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர்ளின் வசனங்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து செய்துள்ளனர் நெட்டிசன்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.