அழகான லுக்கில் அசத்தலாக வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்! கேரள அரசின் பிரம்மாண்டம் - புகைப்படம் உள்ளே.
Keerthi suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் இந்திய அரசு சார்பில் அவருக்கு மகாநடி படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் இந்த படம் நடிகையர் திலகம் என வெளியானது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
அதன் பின்னர் விஜய், விக்ரம், விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அடுத்தடுத்து ஒப்பந்தமான நடிகை கீர்த்தி சுரேஷ், சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் ஈஸ்வரன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையை ஒட்டி கேரள அரசு நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.