×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்யாணம் எப்போ? வடிவேலு ஸ்டைலில் கூலாக பதிலளித்த கீர்த்தி சுரேஷ்.! என்ன இப்படி சொல்லிட்டாங்களே!!

கல்யாணம் எப்போ? வடிவேலு ஸ்டைலில் கூலாக பதிலளித்த கீர்த்தி சுரேஷ்.! என்ன இப்படி சொல்லிட்டாங்களே!!

Advertisement

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்தன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். மேலும் அவர் தெலுங்கிலும் மகாநடி என்ற படத்தில் மூலம் காலடி பதித்து பெருமளவில் பிரபலமானார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவரது கைவசம் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் உள்ளன. தெலுங்கில் அவர் நடித்த தசரா திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது.  தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் பல தகவல்கள் பரவும்.

இந்த நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் ரசிகர் ஒருவர், திருமணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், வடிவேலுவின் நகைச்சுவையான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, எதுவும் இல்லை என்பது போல கூலாக பதிலளித்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi Suresh #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story