ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த படமா! என்ன படம் தெரியுமா?
keerthi suresh - nadikaiyar thilakam - chena - shangai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்திசுரேஷ். விஜய், விஷால், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் ரசிகர்கள் மட்டும் இல்லாது சினிமா துறையினரையும் ஆச்சரியப்பட வைத்தது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
நடிகையர் திலகம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும், தெலுங்கில் இப்படம் மாபெரும் வசூல் சாதனையை பெற்றது. பல்வேறு விருதுகள், பாராட்டுக்களை வாங்கி குவித்த இப்படம் சர்வதேச அளவிலான திரைப்பட நிகழ்வுகளின் முக்கியமாக திகழும் சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில், ‘நடிகையர் திலகம்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநடி’ திரையிடப்படுகிறது.
ஷாங்காயில், வரும் ஜூன் 15ம் முதல் 24 வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலகளவில் இருந்து திரைப்பட ஆர்வலர்கள் வருவார்கள். விழாவின் இறுதியில் பங்கேற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.