×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெள்ளித்திரையில் களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா! வெளிவந்த சூப்பர் தகவல்!!

வெள்ளித்திரையில் களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! ஹீரோ யாருன்னு பார்த்தீர்களா! வெளிவந்த சூப்பர் தகவல்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்  நடிகை சித்ரா. இவர் நட்சத்திர ஹோட்டல்  ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கினார். அவர் அதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் காவியா பெருமளவில் பிரபலமாகிவிட்டார்.

மேலும் அவருக்கு வெள்ளித் திரையிலும் பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. அதாவது காவியா நடிகர் மகேந்திரன் நடிப்பில் அருண் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படமான ரிப்பப்பரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். காமெடி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kavya #Pandiyan stores #mahendran
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story