×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. நயன்தாரா படத்தில் ஹீரோவாகிறாரா கவின்! ஆனா ஹீரோயின் இவரா? தீயாய் பரவும் தகவல்!!

அடேங்கப்பா.. நயன்தாரா படத்தில் ஹீரோவாகிறாரா கவின்! ஆனா ஹீரோயின் இவரா? தீயாய் பரவும் தகவல்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். கவின் சின்னத்திரையில் மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் படங்களில் நடித்துள்ளார்.

அவர்  நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவான லிஃப்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். திகில் நிறைந்த அப்படம் தற்போது வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. லிஃப்ட் படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா அய்யர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கவின் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அப்படத்தில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vani bhojan #kavin #nayanthara
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story