தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்! பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? அதுவும் இவருடனா? இணையத்தையே கலக்கும் புகைப்படம்

Kavin with sivakarthickeyan photo viral

Kavin with sivakarthickeyan photo viral Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  பெருமளவில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி ஆர்மியெல்லாம் உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார் நடிகர் கவின்.

இவர் இதற்கு முன்பு சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து  பெருமளவில் பிரபலமடைந்தார். மேலும் நட்புன்னா என்னானு தெரியுமா?  என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட கவின்  அனைவரிடமும் நட்பு பாராட்டி கலகலப்பாக இருந்தார்.பின்னர் அபிராமி, சாக்ஷி மற்றும் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இன்னும் பிரபலமானார். 

kavin

 இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறினார். அதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் பிசியாக இருந்த கவினுக்கு சில பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. 

 இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன்  இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதை தொடர்ந்து அப்படத்தில் கவினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kavin #sivakarthickeyan #movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story