நீங்கள் இருவரும் இரட்டையர்களா! கவின் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்! வைரலாகும் புகைப்படம்.
Kavin siva

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்னும் சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் அதிகபட்ச ஆதரவை பெற்றார்.
இந்நிலையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதேபோல் நடிகர் கவினும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் சிவாவும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பார்ப்பதற்கு சிவகார்த்திகேயனின் உடன்பிறப்பு போலவே இருக்கு, நீங்கள் இருவரும் இரட்டையர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.