முதல் முறையாக சண்டை போட்டுக்கொண்ட கவின் - சாண்டி! லாஷ்லியாவின் குடும்பம்தான் காரணமா?
Kavin sandi first fight in bigg boss house
80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். இவர்களில் இரண்டுபேர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டு 6 பேர் இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் லாஷ்லியாவின் அம்மா, சகோதரிகள் மற்றும் லாஷ்லியாவின் தந்தை அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நிகழ்ச்சியை பரபரப்பாக்கினர். லாஷ்லியாவின் தந்தை லாஷ்லியவை திட்டும் காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியது.
லாஷ்லியாவின் குடும்பம் வீட்டிற்குள் வந்ததும் அவர்கள் லாஷ்லியாவிடம் அழுது புலம்பியதை பார்த்த கவின் குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறினார். மிகவும் சோகத்துடன் இருந்த அவரை சமாதானம் செய்ய சாண்டி கவினை கலாய்த்தார். தனது மனநிலை தெரிந்தும் சாண்டி தன்னை கலாய்ப்பதாக கவின் தர்ஷனிடம் கூறி புலம்புகிறார்.
உனது மனநிலையை மாற்றவே தான் கலாய்த்ததாக சாண்டி கூறினாலும் கவின் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த சாண்டி அங்கிருந்து எழுந்து பாத்ரூமிற்குள் சென்றுவிட்டார்.
இதுவரை நண்பர்களாக இருந்த சாண்டி மற்றும் கவின் இடையே முதல் முறையாக ஒரு விரிசல் ஏற்பட்டது. என்னதான் கவினிடம் கோவித்துக்கொண்டு சாண்டி உள்ளே சென்றிருந்தாலும், சிறிது நேரத்தில் அவரே தானாக வந்து சோகத்துடன் இருக்கும் கவினை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.