×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நயன்தாரா படத்தில் நடிக்கும் கவின்! அட.. படத்தலைப்பை பார்த்தீர்களா! கியூட்டான வீடியோவுடன் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

நயன்தாரா படத்தில் நடிக்கும் நடிகர் கவின்! அட.. படத்தலைப்பை பார்த்தீர்களா! கியூட்டான வீடியோவுடன் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில்  சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த ரகளைகள், லாஸ்லியாவுடன் காதல் என மேலும் பிரபலமானார்.

கவின் சின்னத்திரையில் மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் 
நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். திகில் கலந்த அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் கவனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்தை தொடர்ந்து கவின் 
அடுத்ததாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் அருண் இயக்கும்  இந்த படத்திற்கு ‘ஊர்குருவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு க்யூட்டான வீடியோவுடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kavin #Vignesh Shivan #Oorkuruvi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story