இப்படி நடந்திருக்கவே கூடாது! கண் கலங்கி ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட வீடியோ..! மாலைக்குள் நடந்த மாஸ் மாற்றம்..!!!
சூர்யா - திரிஷா நடித்த கறுப்பு திரைப்படம் நிதிச் சிக்கலால் கடைசி நேரத்தில் தள்ளிவைப்பு. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே. பாலாஜி வீடியோ வைரலாகிறது.
நடிகர் சூர்யா மற்றும் திரிஷா நடித்திருந்த ‘கறுப்பு’ திரைப்படம் இன்று மே 14 வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து பல இடங்களில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காலை காட்சிகள் ரத்து
மிகுந்த எதிர்பார்ப்புடன் அறிவிக்கப்பட்டிருந்த ‘கறுப்பு’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்காக ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு வந்திருந்தனர். ஆனால் பல தியேட்டர்களில் காலை 9 மணி காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: BREAKING : அதிர்ச்சி! என்னோட ஓட்டை யாரோ போட்டுட்டாங்க.... அடுத்தடுத்து பெண்கள் அதிரடி புகார்! சர்கார் பட பாணியில் பரபரப்பு வீடியோக்கள்....!!!
தகவலின்படி, படம் வெளியீட்டில் இருந்த 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவைத் தொகை காரணமாக இறுதி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பு மற்றும் வெளியீட்டு தரப்புகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நீண்டதாலேயே வெளியீடு தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்கலங்கிய ஆர்.ஜே. பாலாஜி
இதையடுத்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரில் அமர்ந்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ரசிகர்களிடம் நேரடியாக மன்னிப்பு கேட்ட அவர், “32 மாதங்களாக உழைத்த படத்திற்கு இன்று நல்ல தொடக்கம் கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் இந்த நிலைமை வரும் என்று எதிர்பார்க்கவில்லை” என்று கண்கலங்கியபடி பேசினார்.
மேலும், “மக்கள் தங்கள் கவலைகளை மறக்கவே சினிமாவுக்கு வருகிறார்கள். அவர்களை ஏமாற்றியதற்கு மனமார்ந்த வருத்தம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கலை சரி செய்ய முயற்சி
இக்கட்டான சூழலில் நடிகர் சூர்யா நேரடியாக தலையிட்டு சில நிதி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பின் தயாரிப்பு தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
வீடியோவின் இறுதியில் நம்பிக்கையுடன் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரியாகி படம் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.