×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட, நடிகர் கருணாஸா இது! மனைவியுடன் சும்மா வேற லெவலில் கலக்குறாரே! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸியுடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டியாக, காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் திண்டுக்கல் சாரதி,  அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 

மேலும் கருணாஸ் பல இசை நிகழ்ச்சிகளையும், கானா பாடல்களையும் பாடி வருகிறார். அதுமட்டுமின்றி கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்த அவர், திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

இவரது மனைவி கிரேஸ். இவர் பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது கருணாஸ் மற்றும் கிரேஸ் இருவரும் அழகான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அட, நம்ம கருணாஸா இது! சும்மா வேற லெவலில் இருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karunas #Kiresi #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story