×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சூர்யாவை சீண்டினால் சும்மா இருக்கமாட்டோம்.! பாமக ஏன் அப்டி செய்யுறாங்க.? கொந்தளித்த கருணாஸ்.!

நடிகர் சூர்யாவை சீண்டினால் சும்மா இருக்கமாட்டோம்.! பாமக ஏன் அப்டி செய்யுறாங்க.?

Advertisement

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படம் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. இப்படத்தில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்து வந்தது. 

இந்த படத்தில் ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரியின் வீட்டின் நாட்காட்டியில் குறிப்பிட்ட சாதி அடையாளத்தோடு கூடிய படம் இருந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதிலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படத்தில் வரும் அக்காட்சியும் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து இப்பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது, 

இதனையடுத்து சூர்யாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு என வன்னியர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்தஇலையில், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கருணாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி இணையதளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருளர் பழங்குடியினரின் வாழ்வியலை அவர்களின் அறப்போராட்டத்தை மெய்யாக படம் பிடித்ததால் வெற்றியடைந்தது. 

ஆனால் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் அராஜகம் செய்கின்றனர். இந்த திரைப்படத்தை சாதி ரீதியான சிக்கலுக்குள் அடைக்கின்றனர். மீண்டும் மீண்டும் வீண்வம்பு செய்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு சமுதாயத்தை புண்படுத்தும்படியான காட்சிப்படம் திரைப்படத்தில் இடம் பெற்றதாய் பாமகவினர் குரல் கொடுத்தனர். அதை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடிகர் சூர்யா அந்த காட்சியை உடனடியாக நீக்கி விட்டார். 

அத்துடன் அந்த பிரச்சனை முடிந்தது, ஆனால் மீண்டும் மீண்டும் பாமகவினர் வம்படி செய்வதும், திரைப்படச் சுவரொட்டிகளை கிழிப்பதும், திரை அரங்கங்களில் படம் ஓட விடாமல் தடுப்பதும் அபத்தத்தின் உச்சம். தொடர்ந்து இதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவதும். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு எல்லாம் என்ன அரசியல் அறம் என்று புரியவில்லை. 

ஏதாவது ஒன்றில் அரசியல் சூழலில் சறுக்கினால் அடுத்து உடனே ஏதாவது செய்தி பரபரப்பாக பேச வேண்டும் என்ற அரசியல் நோக்கில் இப்போது பாமக ஜெய்பீம் திரைப்படத்தை பயன்படுத்தி இறங்கியுள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு நடிகர் சூர்யா தமிழ் சமூகத்திற்கு பங்காற்றுகிறார். 

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் கொடுத்து பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். தமிழ் சமூகத்திற்கு ஏதாவது ஒன்றென்றால் உறுதியாக நிற்கிறார். ஜெய்பீம் திரைப்படத்தோடு அவர் நின்றுவிடவில்லை அதற்கும் மேலாக அந்த படத்தில் வாழ்ந்த இருளர் சமூக மேம்பாட்டிற்கு ஒரு கோடி நிதி தருகிறார். இப்படிப்பட்ட மனித நேயரை சமூக அக்கறை கொண்ட கலைஞனை இனி விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jai bhim #surya #karunas
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story