ஒரே நாளில் இந்த மூன்றும்.. செம ஹேப்பியாக நடிகர் கார்த்தி பகிர்ந்த சூப்பர் விஷயம்!!
ஒரே நாளில் இந்த மூன்றும்.. செம ஹேப்பியாக நடிகர் கார்த்தி பகிர்ந்த சூப்பர் விஷயம்!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் கார்த்தி. ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்து அவர் தற்போது புகழின் உச்சத்தில் உள்ளார். இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார்.
தற்போது நடிகர் கார்த்தி கைவசம் விருமன், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் போன்ற படங்கள் உள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது நடிப்பில் உருவான பையா, கொம்பன், சுல்தான் போன்ற படங்கள் ஏப்ரல் 2 ம் தேதி ஒரே நாளில் வெளியானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், பையா தனக்கு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கொம்பன் படம் மீண்டும் என்னை கிராமத்துக்கு அழைத்துச் சென்றது. சுல்தான் என்னை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த படங்களின் நினைவுகளை நிலைநிறுத்திய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு தனது நன்றி என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.