தனது அப்பாவை பற்றி கார்த்தி இப்படி சொல்லிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
karthi talk about his father sivakumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தன்னை செல்பி எடுத்த இளைஞரின் மொபைல் போனை தட்டி விட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சிவகுமார் அந்த இளைஞரிடம் மன்னிப்புக்கேட்டு, அவருக்கு புதிய மொபைல் வாங்கிக்கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்திலும் அவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்கையில் அவரது செல்போனை தட்டி விட்டார்.
இந்நிலையில் இது குறித்து சிவகுமாரின் மகனான நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறும்போது, ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்பி எடுப்பது அநாகரீகமானது. செல்பியோ, போட்டோவோ எதுவாக இருந்தாலும் அவர்களிடம் அனுமதி கேட்டுதான் எடுக்க வேண்டும் .
மேலும் இந்த சிறிய சம்பவத்தை சமூக வலைதளங்கள் மீடூ விவகாரம் போன்று பெருமளவில் கொண்டு சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனாலும், இந்த விவகாரத்தில் அப்பா இவ்வளவு கோபப்பட்டிருக்க தேவையில்லை, சற்று பொறுமையாக இருந்திருக்கலாம் என்று தனது கருத்தினை கார்த்தி கூறியிருக்கிறார்.