அப்பாவை கிண்டல் செய்த கஸ்தூரி! கடுப்பாகி மேடையிலேயே பதிலடி கொடுத்த கார்த்தி.! என்ன கூறினார் தெரியுமா?
karthi reply to kasthoori for teasing father sivakumar

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. அவர் இன்று ஜூலை காற்றில் என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அந்நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கை மேடைக்கு அழைத்த கஸ்தூரி கார்த்தியிடம், உங்க கூட ஒரு செல்பி எடுக்கணும்.நல்ல வேலை உங்க அப்பா இல்லை என்று கேலி செய்துள்ளார்.
இதனை கேட்டு கோபமடைந்த கார்த்தி, இது தேவையில்லாத விஷயமாக இருக்கிறது. செல்பிங்குற விஷயத்துக்கு ஒரு மரியாதையே இல்லாம போச்சு.யாருக்குமே கேட்டுவிட்டு போட்டோ எடுக்கவேண்டும் என்ற மரியாதையே இல்லாம போச்சு. மேலும் முன்னாடி ஒரு பிளாஷ் பின்னாடி ஒரு பிளாஷ். இப்படி இருந்த இருந்தா மைக்கிரேன் இருக்க மனுஷன் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு. என்று கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்தார்.